காவ்யா மாதவன் தான் ‘மேடம்’

0
964

பதிவு செய்த நாள்

30ஆக 2017 15:04 நடிகை, Actress, நடிகர் திலீப், actor Dilip,நடிகை காவ்யா மாதவன்,actress Kavya Madhavan, பல்சர் சுனில், Pulsar Sunil,மேடம், Madam, நீதிமன்றம், court, மாஜிஸ்திரேட் நீதிமன்றம், magistrate

நடிகை பாவனா வழக்கில் காவ்யா மாதவன் குற்றவாளி
கொச்சி: நடிகை கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, ‘மேடம்’ என்பது, நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவன் தான் என இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் தெரிவித்துள்ளார்.

பல்சர் சுனில் சொன்ன தகவல்

கேரளாவில், கடந்த பிப்., மாதம் பிரபல நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். சுனிலுக்கு இந்த வேலையை கொடுத்தது நடிகர் திலீப் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பல்சர் சுனில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த அழைத்து வரப்படும் போதெல்லாம், அங்கு காத்திருக்கும் நிருபர்களிடம் அதிர்ச்சி தகவல்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த வழக்கில், ‘மேடம் ஒருவருக்கு தொடர்பு உள்ளது’ என்று சில மாதங்களுக்கு முன் தெரிவித்தான். கடந்த மாதம் நீதிமன்றத்திற்கு வந்த போது, ‘ அந்த மேடம் கேரள சினிமாத்துறையை சேர்ந்தவர். அவர் குறித்த தகவலை, சிறையில் இருக்கும் வி.ஐ.பி.,( திலீப்) வெளியிடாவிட்டால், சில காலத்திற்கு பின் நான் வெளியிடுவேன்’ என, கூறினார்.

இதையடுத்து அந்த மேடம் என்பது திலீப்பின் இரண்டாவது மனைவி காவ்யா மாதவன் தான் என ஒரு தரப்பினரும், நடிகர் திலீப்புடன் நெருக்கமான நட்பு கொண்டுள்ள மற்றொரு நடிகை தான் அந்த மேடம் என மற்றொரு தரப்பினரும் கூறி வந்தனர்.
காவ்யா மாதவனிடம் கேரள போலீசார் சமீபத்தில் விசாரணை நடத்தினர். முதலில் தனக்கு பல்சர் சுனிலை தெரியாது என மறுத்த காவ்யா மாதவன், ஒரு கட்டத்தில் பல்சர் சுனிலை தெரியும். நடிகர் திலீப்பின் உத்தரவின் பேரில் சுனிலுக்கு பணமும் கொடுத்துள்ளேன் என்று கூறினார். காவ்யா மாதவன் தெரிவித்த இந்த தகவல் தான் நடிகர் திலீப்பிற்கு ஜாமின் கிடைக்க முட்டுக்கட்டையாக உள்ளது என தற்போது தெரிய வந்துள்ளது.

சிக்கலை ஏற்படுத்திய காவ்யா
இச்சூழ்நிலையில், பல்சர் சுனில் இன்று எர்ணாகுளத்தில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டார். அங்கு காத்திருந்த நிருபர்கள் அவரிடம், மேடம் குறித்து கேட்டனர். அதற்கு சுனில், ‘ ஒரு கிரிமினலின் வாக்குமூலத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். எனது மேடம் காவ்யா தான்’ என்று பதில் அளித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY