`மெர்சல்’ படத்திற்கு கிடைத்த மற்றுமொரு கவுரவம்

0
369

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்’.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக சீரான இடைவெளியில் புதுப்புது தகவல்களை `மெர்சல்’ படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது. பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இதுஒருபுறம் இருக்க படத்தினை விளம்பரப்படுத்துவதற்கான பணிகளிலும் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தென் இந்தியாவிலேயே முதல்முறையாக `மெர்சல்’ படத்திற்கான எமோஜி டுவிட்டரில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், `மெர்சல்’ படத்திற்கு மற்றுமொரு கவுரவம் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால் தென்னிந்திய சினிமாவிலேயே முதன்முறையாக, `மெர்சல்’ படத்திற்கு வர்த்தக குறியை(TradeMark) தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. எனவே வணீக ரீதியாக `மெர்சல்’ பெயரை இனி பயன்படுத்த முடியாது. ஒருவேளை பயன்படுத்த வேண்டும் என்றால், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு, அதற்குரிய தொகையை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கவுரவத்தால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அத்துடன் `மெர்சல்’ படத்தை டிரெண்டாக்கியும் வருகின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்திருக்கிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY