ரூ.900 செலுத்தி வைரம் வாங்கலாம்.. எப்படி?

0
187

நடுத்தர வகுப்பினர், ஏழை மக்கள் எல்லாம் வைரம் வாங்குவது முடியாத காரியம் என்று நிலை தற்போது மாறியுள்ளது. இந்திய கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் அல்லது ICEX மூலம் வைரத்தினை வாங்குவதற்குச் செப்பியும் அனுமதியினை வழங்கியுள்ளது.

இதன் மூலம் தற்போது எப்படித் தங்க சேமிப்புத் திட்டங்கள் எல்லாம் உள்ளதோ அதேப்போன்று வரைம் வாங்குவதற்கும் பல சேமிப்புத் திட்டங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

எனவே தற்போது மாதம் 900 ரூபாயினை முதலீடு செய்து எஸ்ஐபி திட்டம் மூலம் வைரம் வாங்கலாம் என்பதனை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

எஸ்ஐபி

எஸ்ஐபி

அசல் வைரம் வாங்க வேண்டும் என்றால் இனி ஒவ்வொரு மாதமும் எஸ்ஐபி திட்டம் போன்று மாதம் 900 ரூபாயினை முதலீடு செய்து வந்தால் 2.5 வருடத்தில் வைர நகைக்கு உறியாளர் ஆகிவிடலாம்.

உலகளவில் முதன் முதலாக வைரம் வாங்குவதற்காக எஸ்ஐபி திட்டம் அறிமுகம் செய்திருப்பது இந்தியாவில் ஆகும்.

சரி, வைரத்தினை எப்படி எஸ்ஐபி திட்டம் மூலம் வாங்குவது?

சரி, வைரத்தினை எப்படி எஸ்ஐபி திட்டம் மூலம் வாங்குவது?

ICEX ப்ரோக்கர் நிறுவனத்தில் ஒரு கணக்கினை துவங்க வேண்டும். இதற்குத் தேவையான அடையாள ஆவணங்களை எல்லாம் சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர்க் கணக்கினை துவங்கிய பயனர் எந்தத் தேதி வைரம் வாங்குவதற்கான தவணையினைச் செலுத்த முடியும் என்பதனை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக முதலில் குறிப்பிட்ட அளவு தொகையினைக் கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.

குறைந்தபட்ச அளவு

குறைந்தபட்ச அளவு

குறைந்தது 1 முதல் 30 செண்ட்ஸ் வரையிலான வைரத்தினை இந்தத் திட்டம் மூலம் வாங்க முடியும். இதுவே உங்களது முதலீடு அதிகமானால் கூடுதலாக வாங்க முடியும்.

எப்போது முதல் அமலுக்கு வரும்?

எப்போது முதல் அமலுக்கு வரும்?

இந்த மாதம் இறுதி முதல் இந்த டைமண்டு எஸ்ஐபி திட்டம் முதலீட்டாளர்களின் பயன்பாட்டிற்கு வரும். இதற்கான பயிற்ச்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இயற்கை வைரம்

இயற்கை வைரம்

இந்தத் திட்டம் மூலமாக இயற்கையான, தரமான சோதனை செய்யப்பட்ட வைரம் மட்டுமே அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY