காலத்தால் அழிக்க முடியாத சிலரின் முதல் முத்த அனுபவங்கள்!

0
330

உயிரினும் மேலான தன் துணையிடம் இருந்து பெற்ற முதல் முத்தமானது யாருக்குமே மறக்க முடியாத ஒரு அனுபவமாக தான் இருக்கும். பல பட்டாம்பூச்சிகள் வயிற்றில் ஒரே சமயத்தில் பறப்பது போன்ற உணர்வு ஏற்படும். எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, அந்த முதல் முத்தத்தை நினைத்துக்கொண்டு தான் இருப்போம். அது அனைவருக்குமே மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும்.

இந்த பகுதியில் சிலரது வாழ்க்கையில் உண்மையில் நடந்த முதல் முத்த அனுபவங்கள் பற்றி காணலாம்.

ஓடிவிட்டேன்!

எனக்கு அந்த பையனை முத்தமிட வேண்டுமா.. வேண்டாமா என்று கூட தெரியவில்லை. அரை விநாடி தான் எனது முகத்தை உயர்த்தினேன். என் கன்னங்கள் அவனது மூக்கில் பட்டுவிட்டது. அது எனக்கு மிகவும் அருவெறுப்பாக இருந்தது…! அவனிடம் எதுவும் சொல்லாமல் நான் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டேன்.. அதற்கு பிறகு நாங்கள் இருவரும் சிறிது நாட்கள் பேசிக்கொள்ளவே இல்லை!

வாந்தி எடுத்தேன்..!

வாந்தி எடுத்தேன்..!

நாங்கள் கல்லூரியில் இருந்து மனாலிக்கு சென்றோம். எனக்கு அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. பஸ் இரவு உணவிற்காக ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. நான் அப்போது வாந்தி எடுத்தேன்..! பேருந்து மீண்டும் புறப்பட்டதும், எனது காதலி என் அருகில் வந்து அமர்ந்து எனக்கு 20 நிமிடங்கள் முத்தமிட்டாள்.

அது நடந்து எட்டு மாதங்கள் இருக்கும். இன்னும் கூட என் காதலி, என்னை முத்தமிடும் முன் நீ வாந்தி எடுத்தாயா என்று அருவெறுப்பாக கேட்பாள். அதை நினைக்கும் போது எல்லாம் எங்களுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.

சூயிங்கம் மாற்றிக்கொண்டோம்

சூயிங்கம் மாற்றிக்கொண்டோம்

அனைவருக்கும் முதல் முத்தம் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். நான் எனது காதலனை முத்தமிடும் போது எனக்கு 17 வயது… நான் அப்போது சூயிங்கம் மென்று கொண்டிருந்தேன். அப்போது எனது சூயிங்கத்தின் பாதியை எனது காதலன் எனது வாயில் இருந்து எடுத்துக்கொண்டான்.

நாற்றம் கண்டு விலகிவிட்டேன்!

நாற்றம் கண்டு விலகிவிட்டேன்!

என் முதல் முத்த அனுபவத்தை நினைத்தால் எனக்கு இன்னும் பயமாக இருக்கிறது. நான் முதல் முத்தத்தை எதிர்பார்த்து மிகவும் ஆர்வமாக இருந்தேன். எங்களது அலுவலத்தில் அன்று மதிய உணவு மீன். நான் சைவம் மட்டுமே சாப்பிடுபவள். அவரது வாயில் இருந்து வந்த மீன் நாற்றம் கண்டு அவரை என்னை முத்தமிட வரும் போது ஒரு அடி விலகி நின்றுவிட்டேன்.

ரொம்ப பயந்துவிட்டார்!

ரொம்ப பயந்துவிட்டார்!

எங்களது கதை மிகவும் மகிழ்ச்சியான ஒன்று..! நாங்கள் இருவரும் உதடுகளை இணைத்து முத்தமிட்டு கொண்டோம். முத்தமிடுவதில் எனது திறமையை கண்டு மனுஷன் பயந்துவிட்டார். நான் அதை நினைத்து தொடர்ந்து 5 நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருந்தேன். அவர் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வது என்பது போல இருந்துவிட்டார்.

பள்ளியில் மாட்டிக்கொண்டோம்!

பள்ளியில் மாட்டிக்கொண்டோம்!

எனது முதல் முத்தம் பள்ளியில் தான்..! நாங்கள் முத்தமிட்டு கொண்டிருந்த போது, எங்களது சீனியர்களிடம் மாட்டிக்கொண்டோம். அவர்கள் ஆசிரியரிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டியதால், அவர்கள் கூறிய வேலைகளை எல்லாம் செய்து அவர்களது வாயை அடைத்தோம்..!

NO COMMENTS

LEAVE A REPLY