நீங்க எவ்வளவு நாள் உயிரோட இருப்பீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க…

0
762

ஒருவரது தலைவிதியை பல விஷயங்கள் தீர்மானிக்கும். அதில் கைரேகை, நெற்றியில் உள்ள கோடுகள் போன்றவற்றைக் கொண்டே ஒருவரது தலைவிதி மற்றும் வாழ்நாளைக் கணிக்க முடியும். இக்கட்டுரையில் நெற்றில் உள்ள கோடுகள் ஒருவரைப் பற்றியும், எவ்வளவு காலம் உயிருடன் இருப்போம் என்பது குறித்தும் என்ன சொல்கிறது என பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொருவருக்கும் நெற்றிக் கோடுகள் வேறுபடும். சரி, இப்போது நெற்றிக் கோடுகள் ஒருவரது வாழ்நாள் குறித்து என்ன சொல்கிறது என்று காண்போம்.

60-65 வரையிலான வாழ்நாள்

60-65 வரையிலான வாழ்நாள்

வேதங்களின் படி, ஒருவரது நெற்றியில் 2 கோடுகள் நன்கு அடர்த்தியாகவும், ஆழமாகவும் இருந்தால், அவர்கள் 60-65 வயது வரை வாழ்வார்களாம். மேலும் இம்மாதிரியான நெற்றிக் கோடுகள் பணக்கார ஆளுமையைக் குறிக்கும். இம்மனிதர்கள் பெயருடனும், புகழுடனும், செல்வ வளத்துடனும் இருப்பார்க்ள. ஒருவேளை இந்த கோடுகள் வளைந்தோ அல்லது துண்டு துண்டாகவோ இருந்தால், அவர்கள் வாழ்வில் நிறைய போராட்டங்களை சந்திப்பார்கள்.

75 வயதிற்கு மேலான வாழ்நாள்

75 வயதிற்கு மேலான வாழ்நாள்

வேதங்களின் படி, ஒருவரது நெற்றியில் நன்கு புலப்படும் படி அடர்த்தியான 3 கோடுகள் இருந்தால், அத்தகையவர்கள் 75 வயதிற்கு மேல் வாழ்வார்களாம். அதே சமயம் இம்மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

குறுகிய நெற்றி

குறுகிய நெற்றி

குறுகிய நெற்றியுடன், குழிவிழுந்தவாறு 4 லேசான கோடுகள் இருந்தால், அத்தகையவர்கள் 75 வயது வரை வாழ்வார்களாம்.

100 வயது

100 வயது

வேதங்களின் படி, ஒருவரது நெற்றியில் 5 கோடுகளுடன் சில துண்டு கோடுகள் இருந்தால், அவர்கள் நல்ல ஆரோக்கியமான மற்றும் சந்தோஷமான வாழ்வை வாழ்வார்கள். இம்மாதிரியான மனிதர்கள் 100 வயது வரை வாழக் கூடியவர்களும் கூட.

கீழ் நெற்றியில் 5 கோடுகள்

கீழ் நெற்றியில் 5 கோடுகள்

ஒருவருக்கு கீழ் நெற்றியில் 5 கோடுகள் இருந்தால், அதுவும் பல துண்டுகளுடன் இருந்தால், அது நல்ல அறிகுறி அல்ல. அத்தகையவர்கள் குறைந்த வாழ்நாளைக் கொண்டவர்களாக நம்பப்படுகிறார்கள்.

கண்ணுக்கு புலப்படாத கோடுகள்

கண்ணுக்கு புலப்படாத கோடுகள்

நெற்றியில் கோடுகள் கண்களுக்கே புலப்படாதவாறு இருந்தால், அத்தகையவர்கள் 45-50 வயது வரை வாழ்வார்கள் மற்றும் இத்தகையவர்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

ஒன்றை ஒன்று தொட்டவாறான கோடுகள்

ஒன்றை ஒன்று தொட்டவாறான கோடுகள்

நெற்றியில் உள்ள கோடுகளுள் குறைந்தது 2 கோடுகள் ஒன்றை ஒன்று தொட்டவாறு இருந்தால், அத்தகையவர்கள் 60 வயது வரை வாழ்வார்கள். ஆனால் அவர்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது; அதிக மருத்துவ செலவுகளை சந்திப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY