நல்ல உடம்பு இருந்தால் பிகினி அணிவதில் என்ன தப்பு?: டாப்ஸி

0
282

மும்பை: நல்ல உடல்வாகு இருந்தால் பிகினி அணியலாம். அதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார் நடிகை டாப்ஸி.

ஜுட்வா 2 பாலிவுட் படத்தில் டாப்ஸி பிகினி அணிந்து கவர்ச்சியாக நடித்துள்ளார். மேலும் ஹீரோ வருண் தவானுடன் நெருக்கமான காட்சிகளிலும் துணிச்சலாக நடித்துள்ளார்.

அவரின் பிகினி புகைப்படங்களை பார்த்து அசிங்கமாக கலாய்த்தவருக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

இந்தியன்

இந்தியன்

இந்தியன் என்பதற்காகவோ, இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதற்காகவோ நான் வெட்கப்படவில்லை. முன்பெல்லாம் மக்கள் குறைந்த அளவே ஆடை அணிந்தனர் என்கிறார் டாப்ஸி.

நடிகைகள்

நடிகைகள்

அந்த காலத்தில் நடிகைகள் குட்டி, குட்டியான ரவிக்கைகள், பிகினி ரவிக்கைகள் அணிந்தார்கள். அவர்களை பார்த்து மக்கள் கொண்டாடினார்கள். ஆனால் தற்போது அது கலாச்சாரத்திற்கு எதிரானதாக கருதப்படுகிறது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

பெண்கள்

பெண்கள்

இந்திய பெண்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று யாராவது சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் பிறந்ததில் இருந்தே சொல்கிறார்கள் என்கிறார் டாப்ஸி.

கருத்து

கருத்து

நம் எண்ணங்கள், விருப்பங்களை பற்றி கேட்காமல் இதை தான் செய்ய வேண்டும் என்கிறார்கள். பெண்களுக்கும் கருத்து உள்ளது என்பதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கொந்தளிக்கிறார் டாப்ஸி.

பிகினி

பிகினி

பிகினி அணியும் உடல்வாகு இருந்தால், தன்னம்பிக்கை இருந்தால் தைரியமாக அதை அணியலாம். அதில் தவறு எதுவும் இல்லை என்று டாப்ஸி கூறியுள்ளார்.

VIDEO : Taapsee Pannu REACTS on Being TROLLED by Twitter Users

NO COMMENTS

LEAVE A REPLY