தீபாவளியன்றாலே நமது ஊர்களில் களைகட்டும். பட்டாசுகள், பலகாரங்கள், கோவில் செல்வது என ஊரே பண்டிகை கோலாகலத்தில் நிரம்பி வழியும். தீபாவளி என்றால் அவை மட்டும்தானா? முக்கியமான ஒன்று தீபாவளியன்று லக்ஷ்மி குபேர பூஜை மிகவும் செய்வது மிகவும் விசேஷமானது.
தீபாவளி அல்லது தீவாளி என்றழைக்கப்படும் பண்டிகை ஹிந்து சமுதாயத்தினர் பின்பற்றும் நாட்காட்டியிலுள்ள மிக மகிழ்ச்சிகரமான மற்றும் கொண்டாடப்படும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த நிகழ்வை சிறப்பானதாக்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஒன்று கூடுதல், பரிசுகள் மற்றும் அன்பின் பரிமாற்றம், மற்றும் விளக்குகள் மற்றும் வண்ணங்கள்.
ஆனால் தீபாவளிப் பண்டிகை அதன் ஆன்மீகப் பக்கத்திற்காக கொண்டாடப்படுகிறது. இது விருந்தினர்கள் வீடுகளுக்கு வருவதற்கும் மற்றும் நன்றி கூறுவதற்குமான நேரமாகும். மக்கள் இதுவரை செல்வச் செழிப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான புது வருடத்தைத் தந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள் மேலும் நல்ல நேரங்கள் அவர்களுடன் நிலைத்திருக்க வேண்டுமென்று வரம் கேட்கின்றனர். தீபாவளிப் பண்டிகை ஐந்து நாட்களுக்கும் மேல் கொண்டாடப்படுகிறது.
அது தந்தேராஸில் தொடங்கி பாய் தூஜில் முடிவடைகிறது. இந்த வருடம் தந்தேராஸ் அக்டோபர் 17 ம் தேதி வருகிறது. இது அக்டோபர் 18 ம் தேதி சின்ன தீபாவளியுடன் பின்தொடர்கிறது. முறையாக தீபாவளி அக்டோபர் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 20 ம் தேதியன்று கோவர்தன் பூஜை செய்யப்படுகிறது. கடைசி நாளான பாய் தூஜ் இந்த வருடம் அக்டோபர் 21 ம் தேதி வருகிறது.
லக்ஷ்மி பூஜை தீபாவளிப் பண்டிகையின் முக்கிய பகுதியாகும். எனவே, அன்றைய பூஜைக்கு பயன்படுத்தத் தேவையான பூஜை சாமான்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக உங்களுக்கு இந்த விஷயம் புதியதாக இருந்தாலோ அல்லது இப்போது தான் முதன்முறையாக நீஙகளாகவே தனியாகப் பூஜையை நடத்துகிறீர்கள் என்றாலோ எல்லாவற்றையும் அந்த ஒரே நாளில் ஏற்பாடு செய்வது என்பது சாத்தியமற்றது.
அத்தகைய வாசகர்களுக்கு உதவுவதற்காக லக்ஷ்மி பூஜைக்குத் தேவையான முக்கியமானப் பொருட்களின் பட்டியலை நாங்கள் கொடுத்திருக்கிறோம்.
லக்ஷ்மி பூஜைக்கு பூஜைத்தட்டு தயாரிக்க தேவையானப் பொருட்கள்:
பூக்கள்,
விளக்கு
பூக்கள்,
மணி
ஊதுபத்திகள்
சந்தன பேஸ்ட் மற்றும் குங்குமம்
சங்கு
இந்தப் பொருட்கள் தாலியில் சேர்ப்பதற்கான மிக அடிப்படையான பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிறைய பொருட்களை தாலியில் சேர்க்கலாம் ஆனால் நாம் பார்க்கப்போவது மிக எளிய தாலி ஆகும். விரிவான தாலிகளும் தயாரிக்கப்பட்டு உற்றார் உறவினர்களுக்கு பரிசுகளாக வழங்கப்படுகிறது. மேலும் மக்கள் அவர்களுடைய வியாபாரம் விருத்தியடையும் என்கிற நம்பிக்கையோடு இவற்றை விற்கவும் செய்கின்றனர்.
தாலி தயாரிப்பது எப்படி?
வட்ட வடிவமுள்ள ஒரு தாலியைத் தேர்ந்தெடுங்கள். சந்தன பேஸ்ட் அல்லது குங்குமத்தைப் பயன்படுத்தி தட்டின் நடுவில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரையுங்கள். அதன் நடுவில் ஒரு விளக்கை வையுங்கள். ஊதுபத்திகளையும் பூஜை மணியையும் வையுங்கள். சங்கையும் தட்டில் வையுங்கள். காலியான இடங்களைப் பூக்களைக் கொண்டு நிரப்பி, செம்பருத்திப் பூக்கள் பரிந்துரைக்கப்படுகிறது. தாலியை அழகானதாக்குங்கள்.
லக்ஷ்மி பூஜைக்குத் தேவையானப் பொருட்கள்
ஓம் என்று பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் அல்லது தங்க நாணயங்கள்
மண் அகல் விளக்குகள்
களிமண்ணால் செய்யப்பட்டப் பொருட்கள்
தூப் தானி (ஊதுபத்தி தாங்கி)
தீபக் (மண் விளக்குகள்)
காஜ்லோடா (மை செய்யப் பயன்படுத்தப்படும் கணிமண் பானை)
மெழுகு விளக்குகள்
பூஜைத் தட்டு
காய்ச்சப்படாத பால்
குங்குமச் சிமிழ்
தேவி லக்ஷ்மி மற்றும் கடவுள் கணேசரின் உருவப்படங்கள் மற்றும் பொம்மைகள்
பிரகாசமான நிறத்தையுடைய பட்டுத் துணி
இனிப்பு வகைகள்
ஊதுபத்தி குச்சிகள்
பூக்கள்
தாமரைப் பூக்கள்
நீருடன் கூடிய கலசம்
ஆரத்தி எடுப்பதற்கு தட்டு
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
இந்தப் பூஜைக்குத் தேவையான முதல் விஷயம் நாணயங்களாகும். தங்க நாணயங்கள் பணன்படுத்தப்பட்டாலும் பொதுவாக வெள்ளி நாணயங்களால் இவை செய்யப்படுகின்றன.
மக்களில் சிலர் சிறிய தீபாளிக்கு வெள்ளி நாணயங்களையும் பெரிய தீபாவளிக்குத் தங்க நாணயங்களையும் பயன்படுத்தத் தேர்ந்தெடுக்கின்றனர். பயன்படுத்த வேண்டிய நாணயங்களின் எண்ணிக்கை 11, 21, 31 அல்லது 101.
பூஜைக்கு தட்டில் வைக்க வேண்டிய அகல் விளக்குகளின் எண்ணிக்கை 21 அல்லது 31 ஆகும். வீட்டை அலங்கரிக்க மெழுகு விளக்குகளைப் பயன்படுத்தலாம். அனைத்து அகல் விளக்குகளையும் வைக்க ஒரு பெரிய தட்டைப் பயன்படுத்துங்கள். நாணயங்களை வைக்க சிறிய தட்டைப் பயன்படுத்தலாம்.
குங்குமம், அரிசி மற்றும் காய்ச்சாத பாலை இரண்டு பங்குகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதியை பூஜைக்குத் தனியே வைக்க வேண்டும். மற்றொரு பகுதியை பூஜையில் பங்கேற்பவர்களுக்கு திலகம் தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும். தேவி லக்ஷ்மி மற்றும் கடவுள் கணேசரின் உருவப்படங்களை சின்ன தீபாவளிக்குப் பயன்படுத்தலாம். சிலைகளை தந்திராஸ் தினத்தன்று பயன்படுத்தலாம்.
பட்டுத் துணி பிரகாசமான நிறமுடையதாக இருக்க வேண்டும். இது நாணயத் தட்டுடன் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் பூஜை இடத்திலும் பயன்படுத்தப்படுகிறது. வழக்கமாக தீபாவளி அன்று காலை பூஜைக்கான பொருட்கள் ஒழுங்கமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்படுகின்றன. பூஜை மாலை நேரத்தில் செய்யப்படும்.
பட்டாசுகளை வெடித்தல், அண்டை அயலாருடன் உறவாடிக் களித்தல், போன்ற தீபாவளிப் பண்டிகையின் பொதுவான கேளிக்கைகள் அதன் பிறகு மேற்கொள்ளப்படுகின்றன.