மதுரை அருகே விநோத திருவிழா… அம்மன் போல அலங்கரிக்கப்பட்ட சிறுமிகள்!

0
169

மதுரை: மேலூர் அருகே உள்ள வெள்ளலூரில் ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது.

மதுரை மாவட்டம் வெள்ளலூரைத் தலைமையிடமாகக் கொண்ட 60 கிராமங்கள் வெள்ளலூர் நாடு என்றழைக்கப்படுகிறது. இந்த ஊரில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த ஆண்டிற்கான 15 நாள் திருவிழா மிகிச்சிறப்பாகத் தொடங்கியுள்ளது. 15 நாள் திருவிழாவையொட்டி வெளியூரில் வசிக்கும் மக்கள் உள்ளூரில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கு வந்து விழாவில் உற்சாகத்தோடு பங்கேற்று வருகின்றனர்.

 அம்மன் போல அலங்கரிக்கப்பட்ட சிறுமிகள்

அம்மன் போல அலங்கரிக்கப்பட்ட சிறுமிகள்

முதல் நாளில் ஏழைகாத்த அம்மன் கோயில் முன்பாக 60 கிராமத்தினரும் திரண்டனர். இந்த ஆண்டு அம்மனாக வழிபடக்கூடிய 7 சிறுமிகளை தேர்வு செய்வதற்காக, நூற்றுக்கும் அதிகமான சிறுமிகள் பெற்றோருடன் காத்திருந்தனர். சிறுமிகள் அனைவரும் அம்மன் போல உடை, நகைகள் அணிந்து மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

 ஆசி வழங்கும் சிறுமிகள்

ஆசி வழங்கும் சிறுமிகள்

இவர்களில் 7 பேரை கோயில் பூசாரி சின்னத்தம்பி தேர்வு செய்தார். அம்மனாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுமிகள் 15 நாட்களும் கோயிலிலேயே தங்கி இருப்பர். 60 கிராமத்தினரும் தினசரி சிறுமிகளிடம் ஆசி பெற்றுச் செல்வர். 15-ம் நாளில் பெண்கள் மதுக்கலயம், சிலைகளுடனும், ஆண்கள் வைக்கோல் பிரி சுற்றியபடியும் 7 கி.மீ. நடந்து சென்று, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர். இந்த ஊர்வலத்தில் 7 சிறுமிகளும் அம்மனின் மறு உருவம் பெற்ற தெய்வங்களாக வலம் வருவர்.

60 கிராமங்கள் சைவத்திற்கு மாறியது

திருவிழா தொடங்கியுள்ளதால் 60 கிராமத்தினரும் மாமிசம், தாளித்த உணவு உண்பதை தவிர்த்து வருகின்றனர். இதே போன்று பச்சை மரங்களை வெட்டுதல், பூமியை தோண்டுதல், கட்டிடம் கட்டுவது போன்ற பல்வேறு பணிகளை விரத நாட்களில் கிராம மக்கள் மேற்கொள்வதில்லை.

 குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த அம்மன்

குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த அம்மன்

பண்டை காலத்தில் இங்கு கல் சிலைகளான 7 பெண் குழந்தைகளுக்கு அம்மன் உயிர் கொடுத்ததாக ஐதீகம். இதனால் அம்மன் காலப்போக்கில் ஏழைகாத்த அம்மன் என அழைக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை காத்த அம்மனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இத்திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY