விவாகரத்தான மனைவியின் வாட்ஸ்-அப்பிற்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய நபர் கைது!

0
543

தாலி கட்டிய கணவனாக இருந்தாலும், மனைவியின் விருப்பம் இல்லாமல் அவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது கற்பழிப்பு தான் சட்டம் சொல்கிறது. பல்வேறு நாடுகளில் இது போன்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கணவன்மார்கள் இருக்கிறார்கள்.

திருமணம் ஆனபோதே இப்படி எனில், விவாகரத்து பெற்ற மனைவியை குறுஞ்செய்தி மூலமாகவோ, வீடியோக்கள் அனுப்பியோ அவரது மாற்றுவழியில் பாலியல் வன்முறை செய்வது சைபர் க்ரைம் குற்றம் என்பதை விவாகரத்து பெற்ற ஆண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆபாச வீடியோ!

ஆபாச வீடியோ!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுக்கேந்தர் சிங் (28) ஆண், தனது நண்பரின் மொபைலில் இருந்து விவாகரத்தான தனது மனைவிக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்-அப்

வாட்ஸ்-அப்

சுக்கேந்தர் சிங்கிற்கும் அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. இந்நிலையில் சுக்கேந்தர் சிங் தனது நண்பர் வினய் குமார் என்பவரது மொபைல் வாட்ஸ்-அப்பில் இருந்து தனது முன்னாள் மனைவியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பி வந்துள்ளார்.

சைபர் க்ரைம்!

சைபர் க்ரைம்!

சுக்கேந்தர் சிங்கின் முன்னாள் மனைவி இது குறித்து சைபர் க்ரைமில் புகார் அளிக்கவே. அவர்கள் துரித நடவடிக்கை எடுத்து சுக்கேந்தர் சிங் மற்றும் அவரது நண்பர் வினய் குமார் இருவரையும் கைது செய்தனர்.

புகார்!

புகார்!

தனது புகாரில் சுக்கேந்தர் சிங்கின் முன்னாள் மனைவி, தனது வாட்ஸ்-அப் எண்ணிற்கு தெரியாத ஒரு எண்ணில் இருந்து கீழ்த்தரமான செய்திகளும், ஆபாச வீடியோக்களும் ஒரு மாத காலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தார்.

முன்னாள் கணவர்!

முன்னாள் கணவர்!

சைபர் க்ரைம் விசாரணை துவங்கிய போது தான் அந்த பெண்ணிற்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பியது அவரது முன்னாள் கணவர் என தெரிய வந்தது.

இவர்கள் இருவரும் மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 67, 67A of IT Act. கீழ் ஆபாச வீடியோ அனுப்பிய வினய் மற்றும் சுக்கேந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், திருமணமான பெண்ணுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி இந்திய சட்டம் கூறுபவை பற்றி இனி பார்க்கலாம்…

சீதனம்!

சீதனம்!

திருமணத்திற்கு அந்த பெண் கொடுத்த சீதனம் அனைத்தும் திரும்ப பெற உரிமை இருக்கிறது.

வீடு!

வீடு!

மூதாதையர் வீடு, சொந்த வீடு, வாடகை வீடு எதுவாக இருந்தாலும் கணவர் வாழும் வீட்டில் இருக்க மனைவிக்கு முழு உரிமை இருக்கிறது.

விவாகரத்து!

விவாகரத்து!

தனது கணவன் விவாகரத்து பெறாமல் வேறு பெண்ணுடன் உறவில் இருந்தா, அவரிடம் இருந்து விவாகரத்து கோர மனைவிக்கு முழு உரிமை இருக்கிறது.

மரியாதை!

மரியாதை!

கணவன் வீட்டில் சுய கவுரவம் மற்றும் மரியாதையுடன் வாழ மனைவிக்கு முழு உரிமை இருக்கிறது. அவரை தாழ்த்தி பேசவோ, அடிமையாக நடத்தவோ கூடாது. இது இந்திய சட்டத்தின் படி குற்றமாகும்.

குழந்தை!

குழந்தை!

தாயால் மைனர் குழந்தையை வளர்க்க முடியவில்லை எனில் தந்தை பண உதவி செய்ய வேண்டும். ஒருவேளை தாய், தந்தை இருவரும் பொருளாதார நீருக்கடியில் இருந்தால் மைனர் குழந்தை அவரது மூதாதையர் உதவி நாடலாம். இதற்கு இந்திய சட்டத்தில் உரிமை இருக்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY