அறுசுவையில் கசப்பு மட்டுமே நிறைந்த என் முதல் அனுபவம் – முதலிரவன்று… – நான் கடந்து வந்த பாதை #10

0
1694

உண்மையில் ஆறறிவு கொண்ட மனிதனை காட்டிலும், காதல் ஐந்தறிவு, நான்கறிவு கொண்ட பறவைகள், விலங்குகளிடம் தான் அதிகம் காணப்படுகின்றன.

முக்கியமாக இந்தியாவில் உண்மையான காதல்கள் பல பெற்றோரின் கவுரவம், மரியாதை, குடும்பத்தோடு இறந்துவிடுவோம் போன்ற பல மிரட்டல்களால் மடிந்து விடுகின்றன.

தாயின் மிரட்டலால் அழகான காதலை மட்டுமின்றி, ஒட்டுமொத்தமான வாழ்க்கையை இழந்து தனிமையில் வாடிக் கொண்டிருக்கும் நான் ஒரு தென்னிந்திய பெண்…

பறவை - சிறகொடியும் முன்...

பறவை – சிறகொடியும் முன்…

சிறு வயதில் அனைவரையும் போன்று எல்லா சந்தோசங்களும் நிறைந்து காணப்பட்டது எனது வாழ்க்கை. ஒருவேளை, திருமணத்திற்கு பிறகு சிரிப்பே இல்லாமல் போகும் என்பதால் தான், எனது ஒட்டுமொத்த சிரிப்பையும் சிறு வயதிலேயே கொட்டித்தீர்த்து விட்டேனோ என்னவோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது.

கல்லூரி பயணம்!

கல்லூரி பயணம்!

பள்ளி முடித்து கல்லூரிக்காக முதல் முறையாக வெளியூர் சென்றேன். அங்கு தான் எனது முதல் காதலை கண்டேன், தீபக்! என் மீது இவ்வளவு அக்கறை ஒருவரால் காண்பிக்க முடியும் என்பதை காட்டிலும், இவ்வளவு நம்பிக்கை காட்ட முடியுமா? என்ற கேள்விக்கு பதிலாக நின்றான் சீனியர் தீபக். என்னிடம் இருக்கும் திறமை, ஆற்றலை எனக்கே அறிமுகம் செய்து வைத்தான்.

காதல்!

காதல்!

அந்த தருணத்தில் தான் நாங்கள் இருவரும் காதலில் விழுந்தோம். உண்மையான காதல் எவ்வளவு அழகானது என்பதை தீபக்கிடம் தான் உணர்ந்தேன். நன்கு படித்தோம். படிப்பு முடித்த கையோடுகாதலை கூறலாம் இருந்த எனக்கு, எனது அம்மா ஒரு அதிர்ச்சியை கொடுத்தாள்.

திருமணம்!

திருமணம்!

சிறு வயதில் இருந்து நான் விளையாடிக் கொண்டிருந்த எனது மாமன் மகனை எனக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தார் அம்மா. நான் உடனே தீபக் பற்றியும் எங்களது காதல் பற்றியும் கூறினேன்.

உடனே அம்மா என்னை எமோஷனல் பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தார். கவுரவம், மரியாதை, இறந்துவிடுவேன் என அனைத்து எமோஷனல் பிளாக் மெயிலுக்கும் ஆளானேன்.

பிளேடு!

பிளேடு!

கடைசியில், மாமன் மகனை திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றால் கையை அறுத்துக் கொள்வேன் என பிளேடுடன் வந்து நின்றார். பணிந்தேன். தீபக் என் வாழ்வில் இருந்து மறைந்தான்.

12 நாட்கள் சிறை வாழ்க்கை வாழ்ந்தேன். ஒரு நாள் அம்மா வந்து திருமண நாள் குறித்துவிட்டோம் என கூறி மகிழ்ந்தார். அம்மாவின் கவுரவம் காப்பாற்றப்பட்டது, எனது காதலின் சவ ஊர்வலத்தின் மேல்.

முதலிரவு!

முதலிரவு!

முதலிரவில் நடைப்பிணமாக நின்றிருந்தேன். மாமன் மகன் என்னருகே வந்து உனது பழைய கதை அனைத்தும் அறிந்தேன். என் ஆசைகள் எல்லாம் பொடிப்பொடியாக ஆக்கி, அவசர திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியதாக கடுமையாக பேசினான்.

மாமன் மகன், மாமா வீட்டில் என அனைவரும் என்ன சித்திரவதை செய்தனர். எங்கே நான் படித்தவள் என்பதால் ஓவராக பேசுவேனோ என்ற அச்சமும் அவர்களுக்கு.முதலிரவில் இருந்து முதல் ஐந்து மாதங்கள் இதுவே தொடர்ந்தது.

சிறகொடிந்த நிலை!

சிறகொடிந்த நிலை!

அம்மாவின் கவுரவம், வீட்டின் மரியாதை காக்கப்பட்டது. ஆனால், எனது வாழ்க்கை அதலபாதாளத்தில் வீழ்ந்திருந்ததது. என்ன செய்வது, எது செய்வது என தெரியாது சிறகொடிந்த பறவையாக வீட்டில் அடைப்பட்டு கிடந்தேன். ஐந்து மாதங்கள் கழித்து, அம்மா வீட்டுக்கு செல்ல அனுமதி கிடைத்தது.

தயார் ஆனேன்!

தயார் ஆனேன்!

எனது படிப்பு சான்றிதழ்கள், சொஞ்சம் பணம் மற்றும் தேவையான அளவு ஒருசில துணிகள் என ஒரு சிறிய பையில் அனைத்தையும் அம்மாவிற்கு தெரியாமல் பேக் செய்து வைத்தேன். இனியும், எனது வாழ்க்கையை நான் அழித்துக் கொள்ள விரும்பவில்லை. மீண்டும் பறக்க துணிந்துவிட்டேன்.

பறந்தேன்!

பறந்தேன்!

வீட்டைவிட்டு ஓடிவந்தேன். என் மீதும், எனது வாழ்க்கை மீதும் அக்கறைக் கொண்ட என் நண்பர்கள் வாழும் நகரத்திற்கு. புதிய இடம் தான். நல்ல வேலை கிடைத்தது. நல்ல நண்பர்களுடன் மீண்டும் ஒரு திருமணம் என்ற எண்ணம் இல்லாமல் வாழ துவங்கினேன். அடுத்த திருமணம் என்ற எண்ணமே பிறக்கவில்லை.

இரண்டு வருடங்கள்..

இரண்டு வருடங்கள்..

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் நான் எங்கே இருக்கிறேன் என எனது வீட்டாருக்கு தெரியாது. தெரியாமல் இருப்பதே நல்லது. வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் அனைவருக்கும் கேடாக அமைந்திவிடுவதில்லை. ஆனால், இருமனமும் இணையாத திருமணம் எதற்கு?

என் வாழ்க்கை போன்று சீரழிந்து போவதற்கா? இன்னும் எத்தனை நாட்களுக்கு என் போன்ற பெண்களின் வாழ்க்கை இப்படி நகரும்???

NO COMMENTS

LEAVE A REPLY