உங்கள் புருவத்தை உயர்த்த செய்யும் 17 பனோரமிக் படங்கள்!

0
197

பனோரமிக் படங்கள் என்பது அகலமான படங்கள். எல்லா ஸ்மார்ட் போன்களிலும் இந்த வகை படங்கள் எடுக்கும் வசதிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடல், மலைத்தொடர், ஆகாயம் என இயற்கை காட்சிகளை அழகாக, அற்புதமாக எடுக்க இந்த பனோரமிக் வகை படங்கள் வசதியாக இருக்கிறது.

ஆனால், ஒன்று எதற்காக கண்டுபிடிக்கப்பட்டதோ, நாம் அதை அதற்காக தான் பயன்படுத்துகிறோமா? என்ற கேள்வி எழுப்பினால்.. இல்லை என்பதே யாராலும் மறுக்க முடியாத பதில். டூத் பிக் எனப்படும் பல் குத்தும் குச்சியை நமது ஊர்களில் சாலையோர கடைகளில் பழங்கள் குத்தி சாப்பிட பயன்படுத்துகிறோம்.

எண்ணெய் டின்னை முறுக்கு டப்பாவாக, செல்ஃபீ கேமராவை முகம் பார்க்கும் கண்ணாடியாக என ஒரு பொருளை வேறு விஷயங்களுக்கும் பயன்படுத்துவது மனிதர்களின் இயல்பு. அந்த வகையில். இந்த பனோரமிக் வசதியை வைத்து சிலர் எடுத்து விசித்திரமான படங்களின் தொகுப்பு…

ட்வின் பிரதர்ஸ்?

ட்வின் பிரதர்ஸ்?

இவர்கள் ஒட்டி பிறந்த மாற்றான்கள் அல்ல. உறங்குவதை பனோரமிக் வியூவில் எடுக்க முயற்சித்த போது வந்த எசக்கபிசக்கான படம்.

ட்ரெயின் பூச்சி...

ட்ரெயின் பூச்சி…

ஒய்யாரமாக வீட்டில் நடைப்போட்டுக் கொண்டிருந்த பூனையின் பனோரமிக் படம்.

அழிவு!

அழிவு!

அழிவும் இல்லை, எந்த இழவும் இல்லை… அடிக்கடி இப்படி யாராவது கொளுத்திப் போடுவார்கள். ஆனால், இது கடல் அலைகளின் பனோரமிக் படம்.

இடி, மின்னல், தீ...

இடி, மின்னல், தீ…

ஒரு இசை கச்சேரியில் வண்ணமயமான ஒளிவெள்ள காட்சி. ஆனால், பனோரமிக் படம் எடுப்பதற்குள் ஒளி மாறிவிட்டது. அதன் ரிசல்ட் தான் இந்த படம்.

அஞ்சு தல நாகம்?

அஞ்சு தல நாகம்?

போட்டோஷாப் செய்யப்பட்ட ஐந்து தலை நாகம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? ஆனால், இது போட்டோஷாப் செய்யப்படாத நாயின் பனோரமிக் படம்.

எவ்வளோ பெரிய மாத்திர...

எவ்வளோ பெரிய மாத்திர…

எவ்வளவோ பெரிய செல்ஃபீ… ஒரு பெண் செல்ஃபீ எடுப்பதை மற்றொரு நபர் எடுத்த பனோரமிக் படம்.

கும்மாக்குத்து!

கும்மாக்குத்து!

பனோரமிக் படமாக எடுக்கப்பட்ட சண்டைக் காட்சி… 😛 பனோரமிக் வசதி மூலமாக இப்படி எல்லாம் கூட படங்கள் எடுக்க முடியும் என அறிந்தால்… இந்த மாதரியான படங்களை இனிமேல் சமூக தளங்களில் அதிகம் காண வாய்ப்புகள் உண்டு..

நாலு கால்...

நாலு கால்…

ஒருவேளை மனிதர்கள் நான்கு கால் மிருகமாக இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பார்கள்…

தலைய பிச்சிக்கலாம் போல..

தலைய பிச்சிக்கலாம் போல..

டென்ஷனாக இருக்கும் போது பலர் தலைய பிச்சிக்கிலாம் போல இருக்கு என்பார்கள். நிஜமாக அப்படி செய்தால், இப்படி தான் இருப்பார்கள் போல…

பேமலி போட்டோ...

பேமலி போட்டோ…

இது சாதாரண பேமலி போட்டோ அல்ல. இந்த பனோரமிக் படத்தில் இருக்கும் விசித்திரம் என்ன என்று நீங்களே கண்டுப் பிடியுங்கள்…

உள்ளே வெளியே...

உள்ளே வெளியே…

மனிதர்கள் எல்லாருக்கும் இரண்டு முகங்கள் இருக்கிறது. ஒன்று வெளிப்படையாக தெரிவது, மற்றொன்று மனதில் இரகசியமாக இருக்கும் முகம். அது இரண்டும் ஒன்றாக வெளிப்பட்டால் இப்படி தான் இருக்குமோ?

வெட்டு ஒண்ணு...

வெட்டு ஒண்ணு…

நீரில் குதித்து சாகசம் செய்யும் போது எடுக்கப்பட்ட பனோரமிக் படம். பார்க்க கொடூரமான கொலை காட்சி போல இருக்கிறது.

என்ன இது!?!?

என்ன இது!?!?

இது எந்த —ஸம்-மும் இல்லை. ஒரே நபர் தான் பாத்டாப்பில் உருண்டு விளையாடிய போல எடுத்த பனோரமிக் படம்.

ரெண்டு கால் நாய்!

ரெண்டு கால் நாய்!

நாலு கால் மனிதனை போல, இரண்டு கால் நாய் பனோரமிக் படம்…

ரொம்ப தப்பு...

ரொம்ப தப்பு…

இதெல்லாம் தெரியாம எடுத்தது போல தெரியல… பிளான் பண்ணி எடுத்திருக்காங்க…

பாவம் பாட்டி...

பாவம் பாட்டி…

நார்மல் போட்டோ பனோரமிக்காக மாறி அலங்கோலம் ஆன பாட்டி…

குதிரை...

குதிரை…

இரண்டு கால் நாய் பார்த்தீர்கள்.. இப்போ இரண்டு கால் குதிரை…

அம்புட்டு தான் நன்றி! வணக்கம்!!!

NO COMMENTS

LEAVE A REPLY