மார்பகத்தை அறுத்துப் போட்டு வாழையில் விருந்து! அடுத்து நடந்தது என்ன?

0
1440

சாதி ரீதியிலான பாகுபாடுகள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் பயங்கரமானதாய் கோரமய இருந்திருக்கிறது. பல மக்கள்

இந்தக் கொடுமைகளால் தங்கள் உயிரையே பணயம் வைத்தனர்.

கேரளாவில் மார்பக வரியை ரத்து செய்வதற்காக ஒரு பெண் தன் உயிரையே பணயம் வைத்திருக்கிறார். அவரைப் பற்றி, அன்று நடந்த சம்பவத்தைப் பற்றி குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் கார்ட்டூனாக வரைந்து கதையை விவரித்திருக்கிறார் கார்ட்டூனிஸ்ட்டும் , கிராபிக் கலைஞருமான ஒர்ஜித் சென்.

திருவனந்தபுரம் கதை எனப்பெயரிடப்பட்ட இதனை கடந்தாண்டு தனக்கான உரிமை மறுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்ட ஆராய்ச்சி படிப்பு மாணவர் ரோகித் வெமுலாவிற்கு சமர்பித்துள்ளார்.

மார்பக வரி :

மார்பக வரி :

எனக்குத் தெரியும் என்னுடைய மூதாதையர்கள் நாங்கேலிகளுக்கு தெரியும் நாயர் பெண்களைப் போல தங்களின் மார்பகங்களை மூடிக் கொண்டால் என்னாகும் என்று தெரியும். ஆனால் அவர் அதற்கு தயாராகவே இருந்தார்.

அந்த நாட்களில் பெண்கள் தங்களின் மார்பகங்களை மூடிக் கொள்ளக்கூடாது. உயர்ந்த சாதிப்பிரிவினரான நாயர், நம்பூத்திரி போன்றவர்கள் எங்களை இப்படியான சில வழக்கங்கள் மூலமாக கீழ் சாதி என்று பிரித்து வைத்திருந்தார்கள்.

இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக மார்பக வரியும் விதிக்கப்பட்டிருந்தது. முலக்கரம் என்று அழைக்கப்படும் இந்த வரியை அனைத்து கீழ் சாதி பெண்களும் மார்பகத்தை மறைத்தால் இந்த வரியை கட்டியாக வேண்டும்.

இன்னும் அவமானப்படுத்தும் விதமாக மார்பகத்தின் அளவைக் கொண்டு வரிக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

நாங்கேலி :

நாங்கேலி :

எங்கள் மக்களுக்கு இந்த வரி கொடுக்க முடியாது. அதனால் வேறு வழியின்றி மேலாடை போடாமல் இருந்தார்கள். ஆனால் எங்களில் ஒருத்தியாக இருந்த நாங்கேலி மேல் சாதி பெண்களைப் போல மேலாடை அணிந்து கொண்டாள். அவள், தான் அழகாக இருக்கிறோம் என்று நம்பினாள் . மேல் சாதி ஆண்களை வெறுத்தாள்.

அந்த நாள் :

அந்த நாள் :

நினைத்தது போலவே அந்த நாளும் வந்தது. மேல் சாதியினர் கீழ் சாதியினரை கண்காணித்து அவர்களிடமிருந்து வரி வசூலிக்க வந்தார்கள். அவர் ஒரு கூட்டத்தையே அழைத்து வந்திருந்தார்.

அவள், அவரின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தாள். வாழை இலையை விரித்து வைத்திருந்தாள். வரியாக கொடுப்பதற்கான அரிசி, வீட்டில் குறைவாக இருந்தது.

ஆனால் அரிசி மிகவும் குறைவாக இருந்தது. இலைக்கு அந்தப் பக்கம் கூர்மையான அரிவாளை வைத்திருந்தாள்.

தன்னைத் தானே வெட்டிக் கொண்டாள் :

தன்னைத் தானே வெட்டிக் கொண்டாள் :

பார்வதியர் இவளை சோதனையிட வந்தார்கள். அவள் மேலாடை அணிந்திருக்கிறாள். வரியை விதிப்பதற்காக,மார்பகத்தை காட்டச் சொல்ல மறுப்பேதும் சொல்லாமல் அவர்களிடம் தன் மார்பகத்தை காண்பித்தாள்.

ஆனால் மறு நொடியே கீழே கிடந்த அரிவாளால் தன் மார்பகத்தை வெட்டி விரிக்கப்பட்டிருந்த வாழை இலையில் போட்டாள்.

ஓடி ஒளிந்த மேல் சாதியினர் :

ஓடி ஒளிந்த மேல் சாதியினர் :

அதைப் பார்த்த பதறிப்போன மேல் சாதியினர் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி ஒளிந்தனர். நாங்கேலி அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து போனாள்.

வரி ரத்து :

வரி ரத்து :

மனைவி இறந்த துக்கத்தை தாங்காத நங்கேலியின் கணவர் அவளின் சிதையிலேயே விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இது பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மிகவும் கொடூரமான மார்பக வரியை ரத்து செய்ய வைத்தது. நங்கேலியின் தியாகத்தை பறை சாற்றும் விதமாக, அவரது வீடு நினைவில்லம் ஆக்கப்பட்டு முலச்சி பரம்பு என்று அழைக்கப்படுகிறது

NO COMMENTS

LEAVE A REPLY