இவர் தான் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள்..!

0
338

பொதுவாக தந்தை – மகள் உறவு என்பதே ஒரு சுவாரஸ்யமான உறவு முறை. இருவரும் மிகவும் அன்னியோன்யமாகவும் பாசமாகவும் இருக்கும் உறவுமுறை. எந்த ஒரு தந்தைக்கும் தனது மகள்தான் செல்லம். சாதாரண குடும்பத்திலேயே தந்தை – மகள் உறவு சுவாரஸ்யமாக இருக்கும்போது கோடீஸ்வரர்களின் தந்தை மகள் குறித்து கூறவும் வேண்டுமா?

பல மகள்கள் தங்கள் தந்தையின் வழிகாட்டுதலின்படி குடும்ப வியாபாரைத்தை திறம்பட நடத்துவதிலும் ஒருசிலர் தாங்கள் படித்த படிப்புக்கேற்ற தொழில் அல்லது வேலைகளை தேடிக் கொள்வதிலும் இருப்பார்கள். ஆனால் அதிகபட்சமாக பெரும்பாலான கோடீஸ்வரர்களின் மகள்கள் தங்கள் தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் அவருடையை தொழிலையே தேர்வு செய்கின்றனர். ஒருசிலர் தந்தையை விட திறமையாக நிர்வாகம் செய்த மகள்களும் இந்தியாவில் உண்டு.

இந்நிலையில் இந்தியாவின் 15 கோடீஸ்வர தந்தை மகள்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

வினிதா குப்தா

வினிதா குப்தா

இந்திய கோடீஸ்வரர்களின் மகள்கள் குறித்து குறிப்பிடும்போது வினிதா குப்தாவை விட்டுவிடவே முடியாது. அந்த அளவுக்கு முக்கியமானவர் இவர். தேஷ் பந்து குப்தா என்ற மருந்து கம்பெனிகளின் நிறுவனரின் மகளான வினிதா, தந்தையின் மருந்து கம்பெனிகளை தன்னுடைய பொறுப்பில் ஏற்று வெற்றிகரமாக நடத்தி வருபவர்.

எலக்ட்ரிக்கல் இஞ்சினியரின் பட்டம் படித்த வினிதா, இந்தியாவின் சக்தி மிகுந்த இளம்பெண்களில் மிக முக்கியமானவர்.

இஷிதா சால்காகோர்

இஷிதா சால்காகோர்

ராஜ் மற்றும் தீப்தி சால்காகோர் அவர்களின் புதல்வியான இவர், இந்தியாவின் கோடீஸ்வர தம்பதிகளின் மகள் ஆவார். சமூகத்தில் பெண்கள் கல்வி மற்றும் தனித்திறனுடன் இருக்க வேண்டும் என்ற உறுதியான கொள்கையை வைத்துள்ளவர்களில் ஒருவர் இஷிதான். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் ஜர்னலிசம் பட்டப்படிப்பு படித்த இவர், ஜர்னிலிசம் துறையில் பல சாதனைகள் செய்து வருகிறார்.

இவருடைய புரட்சி மிகுந்த கருத்துக்கள் எழுத்து உருவம் பெறும்போது மிகுந்த வலிமையை தருவதாக அமையும். பல இந்திய மற்றும் சர்வதேச பப்ளிகேசன்கள் இவருடைய எழுத்துக்க்களை பிரசரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிஷா கோத்ரேஜ்

நிஷா கோத்ரேஜ்

கோத்ரேஜ் குரூப்பின் தலைவரான இவர் தனது தந்தை தொழிலை திறம்பட கையாண்டு வருபவர்களில் ஒருவர். இவருடைய குடும்ப சொத்தின் மதிப்பு சுமார் $5 பில்லியன். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற நிஷா, இன்று தனது தந்தையின் கோத்ரேஜ் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 20,000 தொழிலாளிகளுக்கு பாஸ் ஆக இருந்து வருகிறார்.

இவருடைய நிறுவனத்தின் சோப்பு, தலைமுடி சம்பந்தமான தயாரிப்புகள், டாய்லட் பயன்பாட்டு பொருட்கள் ஆகியவை இந்திய அளவில் புகழ் பெற்றவை

ரோஷினி நாடார்

ரோஷினி நாடார்

இந்தியாவில் உள்ள மிக அழகான கோடீஸ்வர பெண்களில் இவரும் ஒருவர். இந்தியாவின் மிகப்பெரிய தொழிலபதிபர்களில் ஒருவரான ஷிவ் நாடார் அவர்களின் புதல்வி மட்டுமின்றி வெற்றி பெற்ற பெண் தொழிலதிபர்களின் ஒருவரும் ஆவார். இவர் தனது 28வது வயதில் எச்.சி.எல் என்ற $5 மில்லியன் மதிப்பு மிகுந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், நிர்வாக அதிகாரியாகவும் பதவி ஏற்றார்.

இன்று வரை வெற்றிகரமாக தனது நிறுவனத்தை உலகம் போற்றும் வகையில் நடத்தி வரும் இவர் ஷிவ் நாடார் பவுண்டேஷன் என்ற டிரஸ்ட்டின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

தான்யா துபாஷ்

தான்யா துபாஷ்

பிரபல தொழிலதிபர் அதி கோத்ரேஜ் அவர்களின் மூத்த மகள். இவருக்கு நாசி என்ற தங்கை உண்டு. கோத்ரேஜ் நிறுவனத்தின் பல குரூப் கம்பெனிகளுக்கு போர்டு இயக்குனராக தான்யா துபாஷ் உள்ளார். கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், கோத்ரேஜ் கன்ஸ்யூமர் நிறுவனம், கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் உள்பட பல நிறுவனங்கள் இவருடைய நிர்வாகத்தின் கீழ் தான் உள்ளது. அதுமட்டுமின்றி பாரதிய மகிளா வங்கி உள்பட ஒருசில வங்கிகளுக்கும் தான்யா தான் போர்டு டைரக்டராக உள்ளார்.

இந்த வங்கியின் மூலம் இந்திய மகளிர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இவரது கொள்கை. இந்தியாவின் சக்தி மிகுந்த பெண்களில் ஒருவர் தான்யா என்று கூறுவதில் எந்தவித மிகைப்படுத்தலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அக்சதா மூர்த்தி

அக்சதா மூர்த்தி

இந்தியாவின் முக்கிய தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வர்களில் ஒருவரான நாராயண மூர்த்தி அவர்களின் மகள்தான் இந்த அக்சதா மூர்த்தி. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற அதிர்ஷ்டக்கார மாணவர்களில் இவரும் ஒருவர். இங்கு இவர் கல்வி மட்டும் பயிலவில்லை. தனது வருங்கால கணவரையும் கண்டுபிடித்தார்.

ஆம், ரிஷி சுனக் என்பவரை இவர் ஸ்டேன்போர்டில் படிக்கும்போதே தனது வருங்கால கணவராக தேர்வு செய்தார். தனது தந்தையின் ஐடி நிறுவனத்தை மிகச்சிறந்த வழிகாட்டுதலுடன் நடத்தி வெற்றிகரமான பெண் தொழிலதிபர்களின் பட்டியலில் முக்கிய இடத்தை வகித்து வருகிறார்.

பியா சிங்

பியா சிங்

இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான கே.பி.சிங் என்பவரின் மகளான இவர் டி.எல்.எப் நிறுவனத்தின் சேர்மனாக பதவியேற்று அந்நிறுவனத்தை திறம்பட நடத்தி வரும் பெண்மணி ஆவார். மேலும் இவர் BOD நிறுவனத்தின் உறுப்பினராக இருந்து வருவதோடு இந்தியாவில் உள்ள ஆடம்பரமான பல புரோஜக்ட்களை எடுத்து வெற்றிகரமாக நடத்தி வருகின்றவர்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வார்ட்டன் கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு படித்த பியா, பொருளாதாரத்தில் மேதையாகியுள்ளார். அதுமட்டுமின்றி பிலிம் மேக்கிங் படிப்பையும் இவர் நியூயார்க்கில் படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிஷா பாட்டியா

வனிஷா பாட்டியா

இந்தியா மட்டுமின்றி உலகப்புகழ் பெற்ற இரும்பு தொழிலதிபர் மற்றும் கோடீஸ்வரான லட்சுமி மிட்டல் அவர்களின் மகள் தான் இந்த வனிஷா பாட்டியா. தொழிலதிபர்களின் மகள்கள் குறித்த பட்டியல் ஒன்றை உலகப்புகழ் பெற்ற ஃபோர்ப்ஸ் எடுத்தபோது கடந்த 2007ஆம் ஆண்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தவர் இந்த வனிஷா.

அமித் பட்டியா என்பவரை கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்த வனிஷா, தனது தந்தையின் பிரிட்டன் தொழிலுக்கு அவரை தலைமை ஏற்க செய்தார். வனிஷா- அமித் திருமணம் இந்தியாவில் நடைபெற்ற மிக காஸ்ட்லியான திருமணங்களில் ஒன்று என்பது நாடறியும்

ஆஷினி பியானி

ஆஷினி பியானி

ஃபியூட்சர் குரூப்பின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ கிஷோர் பியானியின் மகள் தான் இந்த ஆஷினி பியானி. கிஷோர் பியானி அவர்களின் குடும்பத்தில் இருந்து பிசினஸுக்கு வரும் முதல் பெண்மணி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க்கில் உள்ள பார்சன்ஸ் ஸ்கூள் ஆப் டிசைன் மற்றும் ஸ்டேன்போர்டு ஆகியவற்றில் கலவி பயின்ற ஆஷினி படிப்பை முடித்ததும் தனது தந்தைக்கு உதவியாக தொழிலில் இறங்கிவிட்டார். மானுடவியலாளர்கள், தொன்மவியலார்கள், மற்றும் சமூகவியலாளர்கள் ஆகியோர்களுடன் பணிபுரியும் மிகச்சிறந்த வாய்ப்பை பெற்ற அதிர்ஷ்டசாலி ஆஷினி பியானி என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மிதி ரூயா

ஸ்மிதி ரூயா

ரவி ரூயா மற்றும் ஷஷி ரூயா சகோதர்களின் எஸ்ஸார் குரூப் என்றாலே இந்தியாவின் மிகபெரிய குரூப் என்பது அனைவரும் அறிவர். இவர்களில் ரவி ரூயாவின் மகள்தான் இந்த ஸ்மிதி ரூயா.

நியூயார்க நகரில் உள்ள ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பிசினஸ் என்ற கல்வி நிறுவனத்தின் பொருளாதாரம் மற்றும் மார்க்கெட்டிங் படிப்பை முடித்த ஸ்மிதி, லண்டனில் பப்ளிஷிங் படிப்பையும் முடித்தவர். தனது தந்தையின் தொழில் வாரீசாகவும் உள்ளவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலு மிஸ்ட்ரி

ஆலு மிஸ்ட்ரி

டாடா நிறுவனத்தின் மிக அதிகமான ஷேர்களை வைத்துள்ள பலோன்ஜி மிஸ்ட்ரியின் மகளான ஆலு மிஸ்ட்ரி பிறக்கும்போதே கோடீஸ்வர குழந்தையாக பிறந்தவர். இவர் தான் காதலித்த நோயல் டாட்டா என்பவரை திருமணம் செய்தார்.

இந்த திருமணம் மிகவும் ஆடம்பரமான திருமணம் மட்டுமின்றி இவர்களுடைய இல்வாழ்க்கையும் வெற்றிகரமானது. இவருடைய கணவர் நோயல் டிரெண்ட் இந்தியாவின் சேர்மனாகவும் இவருடைய சகோதரர் சைரஸ் மிஸ்ட்ரி டாடா குரூப்பின் சேர்மனாகவும் உள்ளனர்.

அனன்யாஸ்ரீ பிர்லா

அனன்யாஸ்ரீ பிர்லா

குமார மங்கலம் பிர்லா என்ற இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரின் மகளான அனன்யா ஸ்ரீ, ஒரு கமாடிட்டி ஸ்பெஷலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனன்யா ஸ்ரீ ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இவர் படிக்கும்போதே பெண்கள் முன்னேற்றம் குறித்து யோசித்து கொண்டிருப்பவர். அதுமட்டுமின்றி ஏழை எளியோர்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுள்ள ஒரு சமூக நல நல்லெண்ணம் கொண்டவர்.

நந்தினி பிரமா

நந்தினி பிரமா

பிரமா ஹெல்த்கேர் என்ற வெற்றிகரமான நிறுவனத்தை தொடங்கிய அஜய் பிரமா என்பவரின் வாரீசாக பிறந்த நந்தினி, தனது குடும்பத்தொழிலை ஏற்று வெற்றிகரமாக நடத்தி வருபவர்.

பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் வெற்றிகரமான தொழிலதிபரான அஜய், தனது டி.என்.ஏ பிரிவுக்கு மகள் நந்தினியை தலைவராக்கினார். தூய்மையான குடிநீரை மக்களுக்கு வழங்கு வதில் நந்தினியின் நிறுவனம் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இஷா அம்பானி

இஷா அம்பானி

இந்தியாவின் நம்பர் ஒன் தொழிலதிபரான முகேஷ் அம்பானிக்கு பிறந்த அதிர்ஷ்டக்கார மகள் இஷா அம்பானி. ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் டாப் 10 தொழிலதிபர்களின் பட்டியலில் இஷாவின் பெயர் உள்ளது என்பதே இவரது வெற்றிக்கு சான்று.

யேல் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற இஷா ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ள குடும்பத்தில் வாழ்ந்து வருகின்றார். மும்பையில் உள்ள அண்ட்டிலா பில்டிங் என்ற 27 மாடி கட்டிடத்தில் இவரது குழந்தை பருவம் வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மிக அதிக மதிப்பு உடைய கட்டிடங்களில் ஒன்று இவர் வாழும் பங்களா என்பது குறிப்பிடத்தக்கது.

நிஷா ஜக்தியானி

நிஷா ஜக்தியானி

மிக்கிய ஜக்தியானி என்ற மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள் தான் இந்த நிஷா ஜக்தியானி. லேண்ட்மார்க் ரீடெயில் ஸ்டோர்களின் உரிமையாளரான மிக்கி தனது மகளை ஆரம்பத்திலேயே முதலாளி ஆக்காமல், படிப்படியாக அடிமட்டத்தில் இருந்து தனது தொழிலை கற்று கொடுத்து வளர்த்துள்ளார்.
கடைநிலை ஊழியர்களில் ஒருவராக இருந்து நல்ல அனுபவத்துடன் வளர்ந்து வரும் நிஷா, இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 2000 ஸ்டோர்களுக்கு உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு $6 பில்லியன் டாலர் அளவுக்கு இவருடைய ஸ்டோர்களில் வியாபாரம் ஆகின்றது. தந்தை தொழிலை கவனிப்பது மட்டுமின்றி ஐகானிக் என்ற சொந்த நிறுவனத்தை ராஸா பெயிக் என்பவருடன் இணைந்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்ஸ்டார்

NO COMMENTS

LEAVE A REPLY