சினிமாவில் ஹீரோயினியாக ஜொலிக்கும் இரு விளையாட்டு வீராங்கனைகள்!

0
209

விளையாட்டு வீராங்கனைகள் இரண்டு பேர் சினிமாவில் ஹீரோயினியாக ஜொலித்து வருகின்றனர்.

தேசிய அளவிலான குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்தப் படம் மூலம் அவர் உலகம் முழுவதும் பிரபலமானார். மேலும் ரித்திகா சிங்குக்கு சினிமாவில் நடிப்பது அவ்வளவு இஷ்டமாம்.

சினிமாவில் நடிப்பது குறித்து ரித்திகா சிங் கூறுகையில், ‘‘சினிமாவில் நடிப்பது எனக்கு வித்தியாசமான அனுபவம். அதுவும், ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடிக்க அழைக்கும்போது யார் தான் மறுக்க முடியும்? அதைவிட என் சினிமா அறிமுகத்துக்கு சிறந்த படம் கிடைக்காது. நான் ரோண்டா ரௌசியால் ஈர்க்கப்பட்டவள். அவர் குத்துச்சண்டை வீராங்கனையாக மட்டுமின்றி, சினிமாவிலும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அவரைப் போலவே நானும் இரண்டையும் பேலன்ஸ் செய்து கொள்வேன்’ என்கிறார் ரித்திகா சிங்.

நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஒரு கோல்ப் வீராங்கனை. தேசிய அளவிலான பல போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். அவர் அப்பாவின் விருப்பப்படி கோல்ப் விளையாட ஆரம்பித்தார். ‘என்னவென்று தெரியாமல்தான் விளையாட ஆரம்பித்த அவர் நாளாக நாளாக நன்கு கற்றுக்கொண்டு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவிற்கு முன்னேறினார். அவர் 19 வயதில்தான் மாடலிங் செய்ய தொடங்கினார். இப்போதும் ராகுல் ப்ரீ சிங் ஓய்வு நேரங்களில் கோல்ப் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY