உலகில் ஆண்களே இல்லாமல்… 700 கோடி பெண்கள் மட்டும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?

0
1267

இந்த உலகில் பெண்களே இல்லாமல் போனால் நிம்மதி என ஆண்கள் கூறுவார், இந்த உலகில் ஆண்களே இல்லாமல் போனால் சொர்க்கம் என பெண்கள் கூறுவர். ஒருவேளை நமது உலகில் ஆண்களே இல்லை… 700 கோடி பேரும் பெண்களே என்ற நிலை இருந்தால் என்ன ஆகும்.

குழந்தை பெற்றுக் கொள்வது கூட ஊசி போட்டு பெற்றுக் கொள்ளலாம் என ஒரு அதிநவீன நிலை வந்துவிட்டது. பெண்கள் மட்டுமே இந்த உலகில் வாழ துவங்குகிறார்கள் என வைத்துக் கொள்வோம்… அந்த உலகம் எப்படி இருக்கும் என பார்க்கலாம் வாங்க…

#1

ரீசார்ஜ் பண்ணிவிட ஆளே இருக்காது. இதுக்காகவே பொண்ணுங்க ஓவர் டைம் வர்க் எல்லாம் பண்ணனும்.

#2

#2

ஃபேஸ்புக்ல லைக்ஸ் போட, ட்விட்டர்ல ரீட்வீட் பண்ண ஆளே இருக்காது. சமூக தளங்கள் கூட அழிந்து போகும் தருவாய் நெருங்கலாம்.

#3

#3

சில்க் ஸ்மிதா, நமீதாவிலிருந்து, நயன்தாரா, த்ரிஷா வரை கவர்ச்சி இல்லாதத உலகம் சுழன்றுக் கொண்டிருக்கும். பசங்களே இல்லாட்டி வேற யாருக்காக கிளாமர் பண்ண போறாங்க சொல்லுங்க…

#4

#4

36-24-36’னா என்னன்னு கேட்கும் அளவிற்கு உலகம் மாறி நிற்கும்.

#5

#5

மிஸ்டு காலா? அப்படின்னா… மொபைல் உற்பத்தியாளர்களே மிஸ்டு கால் என்பதை நீக்கி விடுவார்கள்.

#6

#6

உலகில் போர் இருக்காது, சண்டைகள் இருக்காது, அணு ஆயுத சோதனைகள், மீதேன் எடுக்கிறான்… அணு உலை விதைக்கிறேன் என எந்த பிரச்சனையும் இருக்காது. உலகம் சற்று நிம்மதியாக இருக்கும்.

#7

#7

நீல நிறமாக சுழன்றுக் கொண்டிருக்கும் உலகம், பிங்க் நிறத்தில் மாறிவிடும். பச்சை புல்வெளியில் இருந்து, காக்கா வரை அனைத்தையும் பிங்க் நிறத்திற்கு மாற்றிவிடுவார்கள்.

#8

#8

பிறந்தநாள் அன்னிக்கி கண்ணதாசன், வைரமுத்து வரிகளை தனக்குதானே ஈமெயில், போஸ்ட் போட்டுக்க வேண்டியது தான். கொஞ்சும் தமிழில் காதல் கவி எழுத யாரும் இருக்க மாட்டார்கள். கிப்ட் ஷாப் என்ற தொழில் அழிந்து போயிருக்கும்.

#9

#9

பால்வினை நோய் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அறவே அழிந்திருக்கும். பெண்கள் சற்றே பெருமூச்சு விட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

#10

#10

பெண்களே தங்கள் மீது அதிக பொறாமை கொண்டு வாழ துவங்குவார்கள். உலக அழகி, பிரபஞ்ச அழகி போட்டியே நடக்காது. நடந்தா வெட்டுக்குத்து, கொலையில தான் போய் முடியும்.

#11

#11

உலகில் மாசு குறைந்து தூய்மை அதிகரிக்க துவங்கும். சிகரெட் முதல் மது, கஞ்சா வரை பலவன நட்டம் அடையும்.

#12

#12

விபச்சாரம் ஒழிந்திருக்கும். பெண்ணடிமை இருக்காது. பாரதி கண்ட புதுமை பெண்கள் அதிகம் சாலையில் உலாவந்து கொண்டிருப்பார்கள்.

#13

#13

கணவன், பெற்றோர், பிள்ளைகள் என யாருக்காகவும் தனது கனவுகளை தியாகம் செய்யாமல், தனக்கான எல்லைகளை வகுத்துக் கொண்டு பெண்கள் வீரநடை போடும் காலமாக அது இருக்கும்.

#14

#14

நைட் ஒவுட், பார்ட்டி, பப் என பல கொண்டாட்டங்கள் மிஸ் ஆகலாம். இரவு நிம்மதியாக தூங்கலாம் யாருக்கும் 12,1 மணி வரை விழித்திருந்து மெசேஜ் செய்ய வேண்டாம்.

#15

#15

என்னதான் ஆண்கள் இல்லாத உலகம் சொர்க்கம் என பெண்கள் சொன்னலும், பெண்கள் இல்லாத உலகம் நிம்மதி என ஆண்கள் சொன்னாலும். இரண்டுமே உயிர் உணராமல் கோமாவில் இருப்பது போல தான் இருக்கும் என்பது தான் நிதர்சனம்!

NO COMMENTS

LEAVE A REPLY